Friday, February 25, 2011



பின்னனிப்பாடகரும் நடிகருமான மலேசியாவாசுதேவன் அவரின் ஆத்மா சாந்தியடைய.இறைவணை வேண்டி ஜரேப்பியத்தமிழ் வானொலியில்...இசையின் மடியில் நிகழ்ச்சியில் அவர்பாடியபாடல் களை தொகுத்துவளங்கினேன் கேட்டு மகிழ இங்கே செல்லவும்.மலேசியாவாசுதேவன்

Thursday, February 24, 2011


தென்இந்தியா-நடிகை ஜெயலலிதை அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கா ஜரேப்பியத்தமிழ் வானொலியில்...இசையின் மடியில் நிகழ்ச்சியில்
நான் தொகுத்துவளங்கி நிகழ்ச்சி அவர் பாடிய பாடல்களும் அவர் நடித்த படங்களில். இருந்தும் மனதை மயக்கும் பாடல்கள் கேட்க இங்கே.....ஜெயலலிதை

Tuesday, October 19, 2010

சென்ற வெள்ளிகிழமை பாடகி ஜென்சி அவர்களோடு தொலைபேசியில்.. உரையாடிய நினைவலைகளையும் அவர்பாடிய பாடகளும் உலாவந்தது ஜரோப்பிய தமிழ்வானொலியில் என் இசைமடியின் நிகழ்ச்சியில் கொடுத்துள்ளேன்..கேட்டுமகிழஇங்கே அழுத்தவும்.

Get this widget Track details eSnips Social DNA

Wednesday, February 17, 2010

எனது வானொலி நிகழ்ச்சிகள் (100) ஓரே சீடியாக வெளிவந்துள்ளது
நிகழ்ச்சி தொகுப்பை நீங்கள் தொடர்ந்து 18 மணித்தியாளமும் 30 நிமிடங்களும் கேட்கலாம்
இலவசமா
பெற்றுக்கொள்ள தொடர்புகொள்ள வேண்டிய முகவரி.kavithaikuyil@gmail.com
வானொலி நிகழ்ச்சிகளை நீங்கள் கேட்டு மகிழ. தொடர்பு கொள்ள வேண்டிய தெலைபேசி இலக்கம் neu 004915225831756

கேட்க முடியாத நேயர்களுக்கு ஒலிப்பதிவு அனுப்பி வைக்கப்படும்.
http://www.esnips.com/web/ENDRUMINIYAVAI
----------------------------------------
(neu)---அன்பு நேயர்களுக்கு என் வானொலி
நிகழ்ச்சிகளை வாரம் தோறும் ஜரோப்பியதமிழ் வானொலி
ETR ல் மதியம் 2 முதல் 2.30 வரை கேட்டு மகிழவும்.

Friday, October 9, 2009


neu

பிரபல தமிழ் பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன்

உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில்

உள்ள தனியார் மருத்துவமனையில்

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த காலத்தில் இந்தியாவில்
புகழ் பெற்ற பாடர்களில் ஒருவராக திகழ்ந்தவர் டி.எம்.சவுந்தரராஜன் (வயது 87). இவரது கண்ணீர் குரலுக்கு தமிழகத்தில் மட்டும் அல்லாது உலகம் முழுக்க ரசிகர்கள் கூட்டம் உண்டு.
டி.எம். சவுந்தரராஜனின்
வயது காரணமாக அவர்
அதிகமாக வெளியில் செல்வதையும்,
மேடைக் கச்சேரிகளை தவிர்த்து வந்தார்.

இந்த நிலயில் கடந்த சில நாட்களாக அவருக்கு
ஞாபக சக்தி குறைந்து வருவதாகவும், மிகவும் தெரிந்தவர்களைக் கூட
அடையாளம் காண இயலாத அளவு
அவர் சிரமப்பட்டு வருவதாக அவரது
குடும்பத்தினர் கவலை தெரிவித்தனர்.

இதனையடுத்து,
அவர் பரிசோதனைக்காக மருத்துவ
மனையில் அட்மிட் ஆனார். டாக்டர்கள்
மூளை நரம்பில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்
என்று தெரிவித்தனர்.

Wednesday, September 23, 2009



எஸ். வரலட்சுமி, (1927-2009)

எஸ். வரலட்சுமி, திரை இசை நடிகர் எஸ்வரலட்சுமி அவர்களின் மரணம்
திரையுலகில் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை மற்றும் பின்னணிப் பாடகியாவார்.
நம்மை வேதனைப்படுத்தினாலும் அவர் நடித்த படங்கள் அவர் பாடிய பாடல்கள் எல்லாம் நம்மை அவரை மறக்க விடுமா? இல்லை என்ற சொல்லை நீ சொல்வதை மறந்துவிடு "இந்தப்பச்சை கிழிக் கொரு செவ்வந்திப்பூ" நம்மை தாலாட்டிய பாடல்.
"வெள்ளிமழை மன்னவா" அவர் தங்கக்குரலால் அள்ளி வீசிய பாடல் நம் செவிகள் இன்னும் அருந்திக்கொண்டுள்ளது அவர் மறவிலும் வாழ்கின்றார் இசையிலும் திரையுலகிலும். வீரபாண்டிய கட்ட பொம்மன். கந்தன் கருணை. ராஜராஜ சோழன். குணா பூவா தலையா.அடுத்த வாரிசு திரப்படங்களில் நடித்ததிருக்கின்றார் அவருக்கு என்ற ஒரு தனிசிறப்பபை அவர் ஏற்படுத்தியுள்ளார் நடிப்பில் !
"இந்தப்பச்சைகிழிக்கு ஒரு செவ்வந்திப்பூவில் தொட்டிலை கட்டிவைத்தேன்"

இந்தப்பாடல் ன் வாழ்வில் ஏற்பட்ட பல துண்பங்களை மறக்கடித்து என்னை தாலாட்டி தூங்கவத்த பாடல் இன்றும் என்மனது கஸ்ரமாக இருந்தால் இந்பாடலை கேட்டால் உடனே என்னை மறந்து தூங்கிவிடுவேன்.

அற்புதமான நடிகை அவர்
ஆத்மா சாந்தியடை இறைவனை பிரத்திப்போம்

Tuesday, September 9, 2008

குன்னக்குடிவைத்தியநாதன் அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலி


இவரின் பிறப்பு 1935
இறப்பு 20008
இவரின் கரங்கள் நம்மை வாழவைத்தன இசை வடிவில்நீங்களும் கேட்டு மகிழ. இங்கே..அழுத்தவும்.

குன்னக்குடிவைத்தியநாதன் அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலி.



இசையில் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்து கொண்டு இருந்த குண்ணக்குடி வைத்யநாதன் அவர்கள் நேற்று இரவு சுகையீனகாரணமா இருந்த போது மாரடைப்பில் இறந்துவிட்டார்.நினைக்கும் போது இதயம் வலியால் தவிக்கின்றது.
நமக்கு நாக்கு இருந்தால் தான் பேசமுடியும் ஆனால் அவரை பொறுத்த வரை வயலினை கையில் எடுத்தாலேபேச ஆரம்பித்துவிடுவார். பாடமட்டும் அல்ல வயலினால் தன்னால் பேசவும் முடியும் என்று நிரூபித்துக்கொண்டுஇருந்தவர் திரு.குன்னக்குடி வைத்யநாதன் அவர் வயலின் வித்தகர் விரலிசை வேந்தர்
இசையால் நோயை குணப்படுத்த முடியும் என்று கேள்விப்படிருக்கின்றோம் இவர் தன் வயலின் இசையால் அவரது தந்தையை குணப்படுத்தியுள்ளாராம்.அவர் வாசித்து குணப்படுத்திய ராகம் -பைரவி .
அவர் வயலினை தொட்டாலே அதற்கு தனி சிறப்பும் அழகும் மலரதொடங்கிவிடும்.
இவர் 22 படங்களுக்கு அற்புதமாக இசை அமைத்துள்ளார்.

எங்கள் இதயத்தை இசையால் வருடிய வள்ளல் வயலின் இசை மாமேதை என்பதே உண்மை.
எனி ஒருவர் பிறந்தாலும் இவரைப்போல் நமக்கு ஒருவர் உண்டா..? அவரது ஆத்மா சாந்தியடைய என் பிராத்தனை.
கண்ணீரோடு


ராகினி