Tuesday, September 9, 2008

குன்னக்குடிவைத்தியநாதன் அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலி


இவரின் பிறப்பு 1935
இறப்பு 20008
இவரின் கரங்கள் நம்மை வாழவைத்தன இசை வடிவில்நீங்களும் கேட்டு மகிழ. இங்கே..அழுத்தவும்.

குன்னக்குடிவைத்தியநாதன் அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலி.



இசையில் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்து கொண்டு இருந்த குண்ணக்குடி வைத்யநாதன் அவர்கள் நேற்று இரவு சுகையீனகாரணமா இருந்த போது மாரடைப்பில் இறந்துவிட்டார்.நினைக்கும் போது இதயம் வலியால் தவிக்கின்றது.
நமக்கு நாக்கு இருந்தால் தான் பேசமுடியும் ஆனால் அவரை பொறுத்த வரை வயலினை கையில் எடுத்தாலேபேச ஆரம்பித்துவிடுவார். பாடமட்டும் அல்ல வயலினால் தன்னால் பேசவும் முடியும் என்று நிரூபித்துக்கொண்டுஇருந்தவர் திரு.குன்னக்குடி வைத்யநாதன் அவர் வயலின் வித்தகர் விரலிசை வேந்தர்
இசையால் நோயை குணப்படுத்த முடியும் என்று கேள்விப்படிருக்கின்றோம் இவர் தன் வயலின் இசையால் அவரது தந்தையை குணப்படுத்தியுள்ளாராம்.அவர் வாசித்து குணப்படுத்திய ராகம் -பைரவி .
அவர் வயலினை தொட்டாலே அதற்கு தனி சிறப்பும் அழகும் மலரதொடங்கிவிடும்.
இவர் 22 படங்களுக்கு அற்புதமாக இசை அமைத்துள்ளார்.

எங்கள் இதயத்தை இசையால் வருடிய வள்ளல் வயலின் இசை மாமேதை என்பதே உண்மை.
எனி ஒருவர் பிறந்தாலும் இவரைப்போல் நமக்கு ஒருவர் உண்டா..? அவரது ஆத்மா சாந்தியடைய என் பிராத்தனை.
கண்ணீரோடு


ராகினி