Friday, October 9, 2009


neu

பிரபல தமிழ் பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன்

உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில்

உள்ள தனியார் மருத்துவமனையில்

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த காலத்தில் இந்தியாவில்
புகழ் பெற்ற பாடர்களில் ஒருவராக திகழ்ந்தவர் டி.எம்.சவுந்தரராஜன் (வயது 87). இவரது கண்ணீர் குரலுக்கு தமிழகத்தில் மட்டும் அல்லாது உலகம் முழுக்க ரசிகர்கள் கூட்டம் உண்டு.
டி.எம். சவுந்தரராஜனின்
வயது காரணமாக அவர்
அதிகமாக வெளியில் செல்வதையும்,
மேடைக் கச்சேரிகளை தவிர்த்து வந்தார்.

இந்த நிலயில் கடந்த சில நாட்களாக அவருக்கு
ஞாபக சக்தி குறைந்து வருவதாகவும், மிகவும் தெரிந்தவர்களைக் கூட
அடையாளம் காண இயலாத அளவு
அவர் சிரமப்பட்டு வருவதாக அவரது
குடும்பத்தினர் கவலை தெரிவித்தனர்.

இதனையடுத்து,
அவர் பரிசோதனைக்காக மருத்துவ
மனையில் அட்மிட் ஆனார். டாக்டர்கள்
மூளை நரம்பில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்
என்று தெரிவித்தனர்.

Wednesday, September 23, 2009



எஸ். வரலட்சுமி, (1927-2009)

எஸ். வரலட்சுமி, திரை இசை நடிகர் எஸ்வரலட்சுமி அவர்களின் மரணம்
திரையுலகில் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை மற்றும் பின்னணிப் பாடகியாவார்.
நம்மை வேதனைப்படுத்தினாலும் அவர் நடித்த படங்கள் அவர் பாடிய பாடல்கள் எல்லாம் நம்மை அவரை மறக்க விடுமா? இல்லை என்ற சொல்லை நீ சொல்வதை மறந்துவிடு "இந்தப்பச்சை கிழிக் கொரு செவ்வந்திப்பூ" நம்மை தாலாட்டிய பாடல்.
"வெள்ளிமழை மன்னவா" அவர் தங்கக்குரலால் அள்ளி வீசிய பாடல் நம் செவிகள் இன்னும் அருந்திக்கொண்டுள்ளது அவர் மறவிலும் வாழ்கின்றார் இசையிலும் திரையுலகிலும். வீரபாண்டிய கட்ட பொம்மன். கந்தன் கருணை. ராஜராஜ சோழன். குணா பூவா தலையா.அடுத்த வாரிசு திரப்படங்களில் நடித்ததிருக்கின்றார் அவருக்கு என்ற ஒரு தனிசிறப்பபை அவர் ஏற்படுத்தியுள்ளார் நடிப்பில் !
"இந்தப்பச்சைகிழிக்கு ஒரு செவ்வந்திப்பூவில் தொட்டிலை கட்டிவைத்தேன்"

இந்தப்பாடல் ன் வாழ்வில் ஏற்பட்ட பல துண்பங்களை மறக்கடித்து என்னை தாலாட்டி தூங்கவத்த பாடல் இன்றும் என்மனது கஸ்ரமாக இருந்தால் இந்பாடலை கேட்டால் உடனே என்னை மறந்து தூங்கிவிடுவேன்.

அற்புதமான நடிகை அவர்
ஆத்மா சாந்தியடை இறைவனை பிரத்திப்போம்