Tuesday, September 9, 2008

குன்னக்குடிவைத்தியநாதன் அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலி


இவரின் பிறப்பு 1935
இறப்பு 20008
இவரின் கரங்கள் நம்மை வாழவைத்தன இசை வடிவில்நீங்களும் கேட்டு மகிழ. இங்கே..அழுத்தவும்.

குன்னக்குடிவைத்தியநாதன் அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலி.



இசையில் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்து கொண்டு இருந்த குண்ணக்குடி வைத்யநாதன் அவர்கள் நேற்று இரவு சுகையீனகாரணமா இருந்த போது மாரடைப்பில் இறந்துவிட்டார்.நினைக்கும் போது இதயம் வலியால் தவிக்கின்றது.
நமக்கு நாக்கு இருந்தால் தான் பேசமுடியும் ஆனால் அவரை பொறுத்த வரை வயலினை கையில் எடுத்தாலேபேச ஆரம்பித்துவிடுவார். பாடமட்டும் அல்ல வயலினால் தன்னால் பேசவும் முடியும் என்று நிரூபித்துக்கொண்டுஇருந்தவர் திரு.குன்னக்குடி வைத்யநாதன் அவர் வயலின் வித்தகர் விரலிசை வேந்தர்
இசையால் நோயை குணப்படுத்த முடியும் என்று கேள்விப்படிருக்கின்றோம் இவர் தன் வயலின் இசையால் அவரது தந்தையை குணப்படுத்தியுள்ளாராம்.அவர் வாசித்து குணப்படுத்திய ராகம் -பைரவி .
அவர் வயலினை தொட்டாலே அதற்கு தனி சிறப்பும் அழகும் மலரதொடங்கிவிடும்.
இவர் 22 படங்களுக்கு அற்புதமாக இசை அமைத்துள்ளார்.

எங்கள் இதயத்தை இசையால் வருடிய வள்ளல் வயலின் இசை மாமேதை என்பதே உண்மை.
எனி ஒருவர் பிறந்தாலும் இவரைப்போல் நமக்கு ஒருவர் உண்டா..? அவரது ஆத்மா சாந்தியடைய என் பிராத்தனை.
கண்ணீரோடு


ராகினி


Wednesday, June 4, 2008

நம்மை தாலாட்டும் குரல் கொண்ட அன்பு எஸ்.பி பாலா .

isaikuyil@googlemail.com

நம்மை தாலாட்டும் குரல் கொண்ட அன்பு எஸ்.பி பாலா .

இன்று பிறந்த நாளை கொண்டாடும் தெய்வீகக்குரலோன் மக்களை இன்பமாக தாலாட்டிய குரலோன்எந்தப்பாடலையும் அப்படியே சுவைக்ககூடியவகையில் அள்ளி வாரிய வள்ளல் நம் இதயத்தில் குடிவாழும் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்களின் பிறந்த நாள் இன்று அவர் என்றும் எல்லா சுககங்களும் பெற்று இன்பமாய் வாழ வாழ்த்துகின்றேன் அவரின் ரசிகையாக.
வயதை எட்டிப்பிடித்தன ஆனால் அவர் குரல் என்றும் இனிமையாயக உள்ளது அவருக்கு நேராக வாழ்த்து தெரிவிக்க முடியாவிட்டாலும் இந்த வலைப்பூவில் என் வாழ்த்தை தெரிவிக்கின்றேன்
'மணிமேகலையே மணியாகலையேநீ தூக்கத்தை விடவேணும்மணமாகலையே மணவேதனையேநீ தீர்த்திட வரவேணும்ஹஉண்மையில் எங்கள் வேதனையை அகற்றிவிடும் குரல் அவரின் மகத்துவக்கரலுக்க யார் அடிமை இல்லை உலகில் அத்தனை மக்களும் அடிமைதான்


எஸ; பியின் குரலுக்கு இந்த குயிலும் காத்திருக்கும் ஒவ்வொரு பாடலையும் ரசிக்கும் போது.பாடும் போது நான் தென்றல் காற்று பொட்டுவைத்த முகம் எத்தனை மகத்துவமான பாடல்களை நம் செவிக்கு விருந்தாக அள்ளி தந்துள்ளார் திருத்தேரில் ஏறிவரும் குரல் அவர் வந்தாலே சபையே கலக்கு கலக்கும் அவரை வாழ்த எழுதுவதற்கு வார்த்தை வர வில்லையே எல்லா தமிழ் நெஞ்சங்களிலும் எழுத்துக்களிலும் வாழும் எங்களஇ எஸ்.பி பாலா அவர்கள். வாழ்க வளமுடன் வாழிய வாழியவே.அன்புடன்சிறிய வயதிலஇ இருந்தேஎன் செவிகளை தாலட்டிய குரல்அன்றமுதல் என் இறுதி மூச்சு வரைஉங்கள் ரசிகை

பா.ராகினி

ஜெர்மனி.

அவர் பாடிய சில பாடல்கள் என்னை தொட்டபல பாடல்களில் சில பாடல்களை இங்கே கேளுங்கநாம் பெற்ற இன்பத்தை நீங்களும் பெற்றுக்கொள்ள.
kavithaikyil@mail.com

Sunday, March 23, 2008

எம். ஜி. இராமச்சந்திரன்




எம். ஜி. இராமச்சந்திரன்

இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் தைமாதம் 17, 1917 ம்திகதி மகனாகப் பிறந்தார்.





தந்தையின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக இவர் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார்.


அதன் பின் சினிமாத்துறையில் கால் பதித்து நிறைவான படங்களையும் நிறைவான பேச்சுக்களையும் மக்களுக்கு வாரி வளங்கி வளர்ந்து வரும் சமுதாயத்தில் கூட இறந்தும் வாழ்ந்து கொண்டு இருப்பவர் இவர்.

நடிப்பின் மகத்துவம் அவரின் புன்னகையிலும் கண்களிலும் அசை போட்டுக்கொண்டே இருந்தன அவருக்கு கொடுக்கப்பட்ட பாடல் களை கூட இனிமையான படல் வரிகள்.

அதிகமா அவரின் குரலில் பாடி அசத்தியவர் டி எம் எஸ் அவர்கள்.

நடிப்பாலே அன்பாலே எல்லோர் மனதை கொள்ளை அடித்துவிட்டார் இவரது முதல் திரைப்படம் சதிலீலாவதி கடினமாக சினிமாத்துறையில் உழைத்து தன் நடிப்பை அசத்திவிட்டார் எம்.ஜி.ஆர்.
அவரது புகழ் என்றும் அழியாத புகழாக உலகத்தில் என்னும் என்றும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது .
வாழ்வில் மறக்க முடியாத ஒரு சிறந்த நடிகர் இவருக்காகவே மக்கள் செய்யத பிராத்தனை கொஞ்சமா இவரைக்கூட மக்கள் கடவுள் வடிவில் பார்த்தார்கள். காட்டிய அன்பும் கருணையும் பாசமும் தான் காரணம் .

இவருக்கு கொடுக்கப்பட்ட சில தத்துவப்பாடல்கள் என்னை வாழ வைத்துக்கொண்டு இருக்கின்றது என்னும்.

பாடல் ஏமாற்றாதே ஏமாறாதே -படம்- அடிமைப்பெண்
அங்கே சிரிப்பவர் சிரிக்க்கெட்டும் அது ஆணவச்சிரிப்பு இங்கே நீ..சிரிக்கும்.. என்ற பாடல்

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்அது முடிஞ்ச பின்னாலும் என்....

எத்தனை பாடல் எதை சொல்வது இறந்தும் என்றும் ஒவ்வொரு இசையிலும் இவர் வாழ்ந்த கொண்டு இருக்கின்றார்.

எனக்கும் ஓர் ஆசை நான் நடக்கும் போதே தூங்கும் போதோ. உண்ணும் போதோ நான் இறந்து விடக்கூடாது என் காதில் நல்ல இசை கேட்கும் போதே நான் இறந்து விடனும்
இசை மட்டுமே உன் மூச்சு பல கால கட்டாயத்தில் சில வேதைனைகள் வரும் போது என்னை வாழ வைப்பது இசை மட்டும் ஒவ்வொரு நல்ல இசையில் நான் வாழ்ந்து கொண்டே இருக்கின்றேன் அதுவும் டி எம் எஸ பாடல்கள் இவருக்காக பாடிய ஒவ்வொரு பாடலும் என்னை வாழ வைக்கின்றது.



Wednesday, February 27, 2008

பி . சுசிலா


பி . சுசிலா


இசை உலகில் இன்பம் தரும் குயிலின் குரல் கொண்ட தமிழ் நெஞ்சங்களை இசையில் வாழவைத்துக்கொண்டிருக்கும்

எங்கள் வற்றாத இன்ப ஊற்று பி . சுசிலா அவர்கள்.


அவரின் குரலை கேட்டாலே நம்மை மறந்தே விடுவோம்
திரை உலகில் ஒரு கலக்கு கலக்கி மக்களை தம் வசமாக்கிய குரல் கொண்டாவர் பி .சுசிலா அவர்களே.


எத்தனை சந்ததிகள் வந்தாலும் அவர் பாடிய பாடல்களை ரசிக்கும் அளவிற்கு பாடியுள்ளார்.

என்ன ஒரு வரம் இதுதான் கடவுள் தந்த வரம் அவர் முகத்தை பார்த்தாலே நாம் சுகமாக தூங்கிட முடியும் போது அவர் பாடினா தூக்கத்தில் சொர்க்கம் செல்லுமுடியும் எந்த மொழிக்கும் குரல் இசைந்து கொடுக்கும் தன்மை கொண்டவர்.

அவர் பாடிய எத்தனை பாடல்கள் நம்மை இன்பத்தில் கொண்டு சென்றன.
கலைமகள் கைப்பொருளே உன்னை கவனிக்க ஆள் இல்லையோ.. என்ற பாடல் கேட்கும் போது அவரின் குரல் நெஞ்சை வருக் கொண்டது.


வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ என்ற பாடல் நாணத்தை தொட்டுச்சென்றன.


இப்படி ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு நிலை தந்து மகிழவைத்த அரசி பி. சுசிலா அவர்கள்.


இசையின் உயிராய்

அவரின்ரசிகையாய்

வாழும்இவள்


ராகினி

ஜேர்மனி.

Wednesday, January 30, 2008

டி எம் சௌந்தராஜன்




டி.எம். சௌந்தராஜன்




இவர் சினிமா திரைக்கே குத்துவிளக்கு என்று சொல்லலாம். எந்த நடிகருக்குப் பாடலைக் கொடுத்தாலும் அவர்கள் குரலைப்போல் அசத்தி விடுவார். பாடல்களை படத்தை பார்த்துக் கொண்டு இருக்கும் போது நமக்கே ஒரு சந்தேகம் வந்து விடும் பாடலை டி.எம்.எஸ். தான் பாடுகின்றாரா, இல்லை சிவாஜி பாடுகின்றாரா என. எம்.ஜி.ஆர். படத்தைப் பார்த்தால் அவர்தான் பாடுகின்றாரா என்ற ஒரு சிந்தனை உருவாகி விடும். அந்த அளவுக்கு அவரின் குரல் கடவுள் கொடுத்த வரம் என்றுதான் சொல்ல வேண்டும்.



இதுதான் இவர் இப்பிறப்பில் கொண்டு வந்த கொடை அவருக்கே கொடுக்கப்பட்ட விருந்து கடவுளால்.
இவரால்தான் பாட முடியும் என்று எத்தனை பாடல்கள் காத்திருந்தன? இவர் வருகைக்கு இசையே தவம் கிடந்தது.


சிவாஜியை வைத்து ஜனரஞ்சகமான கதை அமைப்பக்கொண்ட ஒரு படத்தைத் தயாரிக்க அருணா பிலிம்ஸ் திட்டமிட்டிருந்தனர். இதற்கு சிவாஜியைப்பொல் பாடக்கூடியவர் டி.எம்.எஸ். அவர்கள்தான் எனத் திட்டமிட்டிருந்ததர்கள்.



டி.எம்.எஸ். அவர்கள் ஒரு நாள் ஒரு ஓரமாகநடந்து சென்றாராம். அந்த வழியாக அருணா பிலிம்ஸ் கார் அவர் பக்கம் ஒதுங்கியது. உன்னைத்தான் தேடுகின்றோம் என்று ஒரு குரல் காருக்குள் இருந்து சௌந்தராஜனை நோக்கிச் சொன்னது. அவர் வேறு யாரும் இல்லை கவிஞர் மருகதாசி அவர்கள்."ஜி. ராமனாதன" படப்பாடல்களை சௌந்தரராஜனால்தான் பாட முடியும் என்பதற்கு உத்தரவாதம் கொடுத்தார்.


எட்டுப் பாடல்களையும் ஒப்பந்தம் செய்தார். இதுதான் அவரின் பெருமை இசையே அவருக்காகக் காந்திருந்த பெருமை, அவருக்கு மட்டுமே கிடத்த வரம்.



எட்டுப் பாடல்களும் ரொக்கமும் எட்டாத வாய்ப்பு கிடைத்ததில் மதுரைப் பாடகர் அகமகிழ்ந்தார். படத்தின் கதாநாயகன் தனது பெரிய வெற்றியான பராசக்தியில் தனக்குக் குரல் கொடுத்தவர். சி.எஸ். ஜெயராமன் என்பதை மறக்காத சிவாஜி அவரைப் பாட வைக்காமல் யார் யாரோ வந்து பாடுகின்றார்களே என்று கவலையுடன் தெரிவித்ததார். அதற்கு இந்தப்படப்பாடல்களுக்கு இவர் குரல்தான் சரியானது என்று சொன்னார் இசை அமைப்பாளர் ஜீ. ராமனாதன்.
மூன்று பாடல்கள் பாடுகின்றேன், பதிவ செய்து கேட்டுப் பாருங்கள், பிடிக்கவில்லை என்றால் என் பாட்டுக்கு நான் சென்று விடுகின்றேன் என்றார் விரக்தியுடன் சௌந்தரராஜன்.



பதிவான பாடல்களையும் கேட்டார் சிவாஜி. அவர் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தன. மிகுதிப் பாடல்களையும் நீங்களே பாடுங்கள் எனக் கேட்டுக்கொண்டார். சிவாஜியின் பாராட்டோடு பச்சைக்கொடி காட்டிய அந்த மூன்ற பாடலும் இவையே: 1 பெண்களை நம்பாதே கண்களே 2 ஏறாத மலைதனிலே 3 சுந்தரி சௌந்தரி படம் தூக்குத்தூக்கி, 1954ஆம் ஆண்டு. தமிழ் நாடெங்கும் தமிழ் போல் இந்த மூன்றெழுத்தும் டி.எம்.எஸ். பாடகரின் புகழை கொடிகட்டிப் பறக்கச் செய்தன. கம்பீரமும் மென்மையும் கலந்த சாரீரம், உணர்ச்சிப் பிராவகம், பொருளுக்கேற்ப வார்த்தைகள் பெறும் ரிங்காரம், தமிழ் மொழியை அச்சுப்போல் பாடுவதில் நாதா ஜாலம், உச்சரிப்பின் நாவின் மகிமை இத்தனையும் அம்சாமகக் கொண்ட குரலோன் டி.எம்.எஸ். அவர்களே.
எத்தனை பாடல்கள் அவரால் உயிர்பெற்று வாழ்கின்றன? இன்றும் காதல், பாசம், நேசம், தத்துவம், சோகப்பாடல்கள் எத்தனை வடிவங்களுக்கும் குரலை வாரி வழங்கி மக்களை வாரி அனைத்துக்கொண்டார். இசையால் என்றும் அழியாத வரம் பெற்ற பாடல்கள்.




ஒவ்வொரு சந்ததியும் சுவாசிக்கக் கூடிய பாடல்களை, அள்ளித் தெளித்துள்ளார் தன் குரலால்.
டி.எம்.எஸ். அவர்கள் நமக்குக் கிடைத்த ஒரு சொத்து என்பதே உண்மை.

Friday, January 25, 2008

பாடகி எஸ் ஜானகியின் பதிவு





பாடகி எஸ் ஜானகியின் பதிவு


எந்த ஒரு பாடலாக இருந்தாலும் தன் குரலை வைத்தே அசத்தக்கூடிய வரம் பெற்ற தாய் எஸ் ஜானகி அவர்கள் குழந்தையாக குரலிலும்மனதாலும் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கின் றார் ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும் எனி வரும் சந்ததிகளை கூட தன் வசமாக்கி கொள்ளும் குரல் வல்லமை கொண்டவர் எழுதப்படும் கவிதைகளுக்கு
உணர் வூட்டமாக பாடி மக்களை வசியப்படுத்தும் தன்மை உடையவர் அவர்.

பாடும் ஒவ்வொரு பாடலும் நம்மை அப்படியே அமர்திடச்செய்கின் றது அவரின் குரல்பாடும் போது எந்த அசைவுகளும் கொடுக்காது தன் உடலை அமைதி படுத்தி குரலை வெளிக்காட்டும் அதி சக்தி வாய்ந்த வல்லமை கொண்டவர் ஜானகி அவர்கள் அவரது பாடல் கள் எல்லாமே உரிர் பெற்ற பாடல்கள். அவரது இசைப்பயணம் என்றும் வாழ வேண்டும் காலகாலமாய்.

அவர் பாடிய பாடலில் சிங்கார வேலனே தேவா.. என்ற பாடல் பாடும் போது அவரது கம்பீரமாண குரலை அப்படியே எனக்குள் சுவாசித்து பசி மறந்தேன்.அவருக்கு வயது தான் போனதே தவிர அவரது குரல் என்றும் இளமைக்காலத்தில் ஊஞ்சல் ஆடிக்கொண்டே உள்ளது இறைவன் கொடுத்த வரம் என்றுதான் சொல்லனும் அவரது குரலைபோல் மனதும் குழந்தை வடிவமாய் முகத்தில் புன்னகை சிந்தியபடி அவர் பாடும் அழகை ரசிக்க நாம் எடுத்த வரம் இந்த மானிடப்பிறவி என்ற போது மனதில் உருவாகிக்கொள்கின்றது என்னை அறியாத மகிழ்ச்சிப் பரவசம். எனக்குள் வந்து செல்கின்றது.