Wednesday, January 30, 2008

டி எம் சௌந்தராஜன்




டி.எம். சௌந்தராஜன்




இவர் சினிமா திரைக்கே குத்துவிளக்கு என்று சொல்லலாம். எந்த நடிகருக்குப் பாடலைக் கொடுத்தாலும் அவர்கள் குரலைப்போல் அசத்தி விடுவார். பாடல்களை படத்தை பார்த்துக் கொண்டு இருக்கும் போது நமக்கே ஒரு சந்தேகம் வந்து விடும் பாடலை டி.எம்.எஸ். தான் பாடுகின்றாரா, இல்லை சிவாஜி பாடுகின்றாரா என. எம்.ஜி.ஆர். படத்தைப் பார்த்தால் அவர்தான் பாடுகின்றாரா என்ற ஒரு சிந்தனை உருவாகி விடும். அந்த அளவுக்கு அவரின் குரல் கடவுள் கொடுத்த வரம் என்றுதான் சொல்ல வேண்டும்.



இதுதான் இவர் இப்பிறப்பில் கொண்டு வந்த கொடை அவருக்கே கொடுக்கப்பட்ட விருந்து கடவுளால்.
இவரால்தான் பாட முடியும் என்று எத்தனை பாடல்கள் காத்திருந்தன? இவர் வருகைக்கு இசையே தவம் கிடந்தது.


சிவாஜியை வைத்து ஜனரஞ்சகமான கதை அமைப்பக்கொண்ட ஒரு படத்தைத் தயாரிக்க அருணா பிலிம்ஸ் திட்டமிட்டிருந்தனர். இதற்கு சிவாஜியைப்பொல் பாடக்கூடியவர் டி.எம்.எஸ். அவர்கள்தான் எனத் திட்டமிட்டிருந்ததர்கள்.



டி.எம்.எஸ். அவர்கள் ஒரு நாள் ஒரு ஓரமாகநடந்து சென்றாராம். அந்த வழியாக அருணா பிலிம்ஸ் கார் அவர் பக்கம் ஒதுங்கியது. உன்னைத்தான் தேடுகின்றோம் என்று ஒரு குரல் காருக்குள் இருந்து சௌந்தராஜனை நோக்கிச் சொன்னது. அவர் வேறு யாரும் இல்லை கவிஞர் மருகதாசி அவர்கள்."ஜி. ராமனாதன" படப்பாடல்களை சௌந்தரராஜனால்தான் பாட முடியும் என்பதற்கு உத்தரவாதம் கொடுத்தார்.


எட்டுப் பாடல்களையும் ஒப்பந்தம் செய்தார். இதுதான் அவரின் பெருமை இசையே அவருக்காகக் காந்திருந்த பெருமை, அவருக்கு மட்டுமே கிடத்த வரம்.



எட்டுப் பாடல்களும் ரொக்கமும் எட்டாத வாய்ப்பு கிடைத்ததில் மதுரைப் பாடகர் அகமகிழ்ந்தார். படத்தின் கதாநாயகன் தனது பெரிய வெற்றியான பராசக்தியில் தனக்குக் குரல் கொடுத்தவர். சி.எஸ். ஜெயராமன் என்பதை மறக்காத சிவாஜி அவரைப் பாட வைக்காமல் யார் யாரோ வந்து பாடுகின்றார்களே என்று கவலையுடன் தெரிவித்ததார். அதற்கு இந்தப்படப்பாடல்களுக்கு இவர் குரல்தான் சரியானது என்று சொன்னார் இசை அமைப்பாளர் ஜீ. ராமனாதன்.
மூன்று பாடல்கள் பாடுகின்றேன், பதிவ செய்து கேட்டுப் பாருங்கள், பிடிக்கவில்லை என்றால் என் பாட்டுக்கு நான் சென்று விடுகின்றேன் என்றார் விரக்தியுடன் சௌந்தரராஜன்.



பதிவான பாடல்களையும் கேட்டார் சிவாஜி. அவர் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தன. மிகுதிப் பாடல்களையும் நீங்களே பாடுங்கள் எனக் கேட்டுக்கொண்டார். சிவாஜியின் பாராட்டோடு பச்சைக்கொடி காட்டிய அந்த மூன்ற பாடலும் இவையே: 1 பெண்களை நம்பாதே கண்களே 2 ஏறாத மலைதனிலே 3 சுந்தரி சௌந்தரி படம் தூக்குத்தூக்கி, 1954ஆம் ஆண்டு. தமிழ் நாடெங்கும் தமிழ் போல் இந்த மூன்றெழுத்தும் டி.எம்.எஸ். பாடகரின் புகழை கொடிகட்டிப் பறக்கச் செய்தன. கம்பீரமும் மென்மையும் கலந்த சாரீரம், உணர்ச்சிப் பிராவகம், பொருளுக்கேற்ப வார்த்தைகள் பெறும் ரிங்காரம், தமிழ் மொழியை அச்சுப்போல் பாடுவதில் நாதா ஜாலம், உச்சரிப்பின் நாவின் மகிமை இத்தனையும் அம்சாமகக் கொண்ட குரலோன் டி.எம்.எஸ். அவர்களே.
எத்தனை பாடல்கள் அவரால் உயிர்பெற்று வாழ்கின்றன? இன்றும் காதல், பாசம், நேசம், தத்துவம், சோகப்பாடல்கள் எத்தனை வடிவங்களுக்கும் குரலை வாரி வழங்கி மக்களை வாரி அனைத்துக்கொண்டார். இசையால் என்றும் அழியாத வரம் பெற்ற பாடல்கள்.




ஒவ்வொரு சந்ததியும் சுவாசிக்கக் கூடிய பாடல்களை, அள்ளித் தெளித்துள்ளார் தன் குரலால்.
டி.எம்.எஸ். அவர்கள் நமக்குக் கிடைத்த ஒரு சொத்து என்பதே உண்மை.

1 comment:

RAMESH said...

Jes True TMS is the world voice god no one are equal for his voice
great A1 singer only TMS in India